Last Updated:
2012 நவம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த மதகஜராஜா திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஞாயிறு அன்று வெளியாகவுள்ளது. பொங்கல் ரிலீஸில் இருந்து அஜித்தின் விடாமுயற்சி பின் வாங்கியதை தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்கள் சில பொங்கலையொட்டி ரிலீஸாகின்றன.
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கிய பின்னரும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என விஷாலின் ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் விஷாலுக்கு கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
இந்நிலையில் மதகஜராஜா படம் பொங்கலையொட்டி வெளியாகுவதை முன்னிட்டு, ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷால் சற்று உடல் நடுக்கத்துடன் பேசினார். அவரது உடல் மொழியும் முன்பு இருந்ததைப் போன்று காணப்படவில்லை.
எப்போதும் துருதுருவென கம்பீரமாக காட்சியளிக்கும் விஷாலை உடல் நல குறைவில் பார்த்த ரசிகர்களும் நலம் விரும்பிகளும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். மதகஜராஜா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் இடம்பெற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அவர் மீது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
இதற்கு மருத்துவர்கள் சில காரணங்களை கூறினாலும் சமூக வலைதளங்களில் சிலர் தங்களது இஷ்டத்திற்கு ஏற்ப வதந்திகளை பரப்பி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என விஷால் ரசிகர் மன்றமான அகில இந்திய புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவதூறு பரப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ள விஷாலின் மக்கள் நல இயக்கம், விஷாலுக்கு ஏற்பட்ட அவதூறுகள் வருங்காலத்தில் யாருக்கும் நடைபெறக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
2012 நவம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த மதகஜராஜா திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஞாயிறு அன்று வெளியாகவுள்ளது. பொங்கல் ரிலீஸில் இருந்து அஜித்தின் விடாமுயற்சி பின் வாங்கியதை தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்கள் சில பொங்கலையொட்டி ரிலீஸாகின்றன.
January 09, 2025 4:41 PM IST