Last Updated:
சவுதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ராமநாதபுரம், திருவாரூர், குமரி, தஞ்சாவூர் என 8 மாவட்ட கிரிக்கெட் அணிகளாக இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.
சவுதி அரேபியாவில் தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் சீசன் 5 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
சவுதி அரேபியா NRTIA முதன்மைச் செயலாளர் மயிலாடுதுறை வெங்கடேசன் மற்றும் திருச்சி ஆரிப் மக்பூல் ஆகியோர் தலைமை தாங்க, டமாம் (Dammam), கிழக்கு மண்டலம், ராகா கிரிக்கெட் அசோசியேஷன் (Raka Cricket Association) சார்பில் தமிழ்நாடு பிரிமியர் லீக் சீசன் 5 கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. தலைமைத் தலைவர் நூர் ஹசன் மற்றும் டிஎன்பிஎல் (TNPL) குழும உறுப்பினர்கள் இணைந்து போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சவுதி அரேபியாவில் பல தமிழருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பக்ருதீன், கடந்த 40 வருடங்களாக சவுதியில் சமூக பணியாற்றி வரும் நாசு சவுக்கத் அலி மற்றும் பதர் அல் ராபியா மருத்துவமனை தாளாளர் பிஜு கல்லுமலை, இலங்கை சமூக செயல்பாட்டாளர் நவா என்னும் நவரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ராமநாதபுரம், திருவாரூர், குமரி, தஞ்சாவூர் என 8 மாவட்ட கிரிக்கெட் அணிகளாக இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இறுதியில் மதுரை அணி கோப்பையை தட்டிச் சென்றது. கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியின் முடிவில் ஐந்தாம் ஆண்டை கொண்டாடும் வண்ணம் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த போட்டிகளை சவுதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகள், நிர்வாகிகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 17, 2024 2:27 PM IST