Last Updated:

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த சிற்பி ஹாங் ஜின்ஷி.

News18

புத்தர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் சிலை அதிக கவனம் பெற்ற நிலையில், 2 லட்ச ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்த போதிலும் அதை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த சிற்பி ஹாங் ஜின்ஷி.

வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், புத்தர் வடிவிலான டிரம்ப்பின் சிலைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

11 ஆயிரம் முதல் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் அதை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முன்னதாக 2021ஆம் ஆண்டு டிரம்பின் சிலை சீன ஆன்லைன் விற்பனை தளத்தில் அதிக கவனத்தை ஈர்த்தது.

அதன்பின், அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஆன்லைன் மூலம் பலர் ஆர்டர் செய்து உள்ள சிலை விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாக சிற்பி ஹாங் ஜின்ஷி தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/உலகம்/

புத்தர் வடிவில் டிரம்ப் சிலை.. பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் ஏகபோக விற்பனை.. விலை எவ்வளவு தெரியுமா?



Source link