மேலும், விவசாயத்தைக் காட்டிலும் காளான் சாகுபடியில் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும் என்பதனால், காளான் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர் விவசாயிகள். குறைந்த முதலீட்டிலேயே துவங்கப்படும் இந்த சாகுபடியில், இதமான வெப்பநிலை மற்றும் தேவையான அளவு நீர் தெளிக்கப்படுகிறது.
மேலும், காளான் சாகுபடியில் இதற்குத் தேவையான மண் மற்றும் ரசாயனங்கள் அனைத்துமே சமவெளிப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது. இவற்றைக் கொண்டு வந்தபின், இங்கு பிளாஸ்டிக் காகிதங்களில் அடுக்கி வைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Tsunami Day: இந்த கடல் சுனாமிக்கு முன்ன இப்படி இருந்ததில்ல… ஆழிப்பேரலையின் அச்சம் அகலாத மக்கள்…
மொட்டுக் காளான் மூன்று முறை தொடர்ந்து வளரும் தன்மை கொண்டவை எனத் தெரிவிக்கின்றனர். ஒரு பிளாஸ்டிக் பைக்கு 150 ரூபாய் வரை முதலீடு செய்தால், அதிலிருந்து கிடைக்கும் லாபம் 500 ரூபாய் வரையிலும் உள்ளது எனத் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
தினந்தோறும் சுத்தமாகப் பராமரித்தால் மட்டுமே சிறந்த விளைச்சல் எடுக்க முடியும், இல்லையேல் பூச்சி பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், இந்த மொட்டுக் காளான் சாகுபடியில் பராமரிப்பு என்பது அத்தியாவசியமானதாக உள்ளது. இந்த காளானைச் சாப்பிடுவதன் மூலமாக, கேன்சர் நோய்கள் அதிகமாகப் பாதிப்பதில்லை எனத் தெரிவிக்கின்றனர் விவசாயிகள். மலை மாவட்டத்தைக் காட்டிலும், சமவெளிப் பகுதிகளில் அதிகமாக விற்பனையாகின்றது எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகியவற்றிற்கும் அதிக அளவில் பேருந்துகளின் மூலமாக, காகித அட்டைகளில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மலைப்பகுதிகளைக் காட்டிலும் சமவெளிப் பகுதிகளில் ஒரு பாக்ஸ் 1500 வரையிலும் விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Healthy Vegetable: மட்டன், மீன் எல்லாம் இது முன்ன ஜுஜுபி… உலகின் சக்தி வாய்ந்த காய்கறி பற்றி தெரியுமா…
20 ஆண்டுகளாகக் காளான் சாகுபடி செய்து வரும் ஜெசிதா இதுகுறித்து கூறுகையில், “முதலில் பெரிய அளவில் ஒரு காளான் கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். பின்னர் சிறு, சிறு விவசாயிகளும் இதை ஆர்வத்துடன் தொடங்கியதால், இங்கு பணிக்கு வந்துள்ளேன். நீலகிரியில் அனைத்துப் பகுதிகளிலும் மஸ்ரூம் சாகுபடி செய்யப்படுகிறது. பட்டன் மஸ்ரூம் விளைச்சலால், விவசாயிகள் அதிகம் லாபம் அடைகின்றனர்.
மஸ்ரூம் சாகுபடியில், கம்போசர் மண் ஆகியவை சமவெளிப் பகுதியிலிருந்து வரும். அவற்றைப் பதப்படுத்திப் பராமரிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஒரு இடத்தில் எடுத்து விட்டால், நான்கு நாட்கள் கழித்து தான் அந்த இடத்தில் எடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
The Nilgiris,Tamil Nadu
December 26, 2024 7:55 PM IST
Button Mushroom: ரூ.150 முதலீடு செய்தால் ரூ.500 கிடைக்கும்.. மொட்டுக் காளான் சாகுபடியில் மும்மடங்கு லாபம்..