Last Updated:

தாக்குதலில் சைஃப் அலிகானுக்கு 6 இடங்களில் கத்திக்குத்து நடந்துள்ளது என தகவல் வெளியானது. சிகிச்சை எடுத்துவரும் சைஃப் அலிகான் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

saif ali khan

வீடு புகுந்து நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். மும்பையில் உள்ள தனது வீட்டில் சைஃப் அலிகான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். இதை தடுக்க வந்த பணியாளர் ஒருவரை கொள்ளையர் தாக்கிய நிலையில், அதை தடுக்க வந்த சைஃப் அலிகான் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் சைஃப் அலிகானுக்கு 6 இடங்களில் கத்திக்குத்து நடந்துள்ளது என தகவல் வெளியானது. சிகிச்சை எடுத்துவரும் சைஃப் அலிகான் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சைஃப் அலிகானின் 4 வயது மகனை பணயமாக வைத்து மர்ம நபர் 1 கோடி ரூபாய் கோரியதாகவும், அப்போது நடந்த சண்டையில் சைஃப் அலிகான் மீது கத்திக் குத்து தாக்குதல் நடந்ததாகவும் அவரது பணிப்பெண் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைஃப் அலிகான் வீட்டு பணிப்பெண் எலியமா பிலிப் அளித்த வாக்குமூலத்தில், வீட்டினுள் நுழைந்த மர்ம நபர், முதலில் சைஃப் அலிகானின் 4 வயது மகன் ஜெஹாங்கீரின் (Jehangir) அறைக்குள் சென்றதாக தெரிவித்துள்ளார்.

ஜெஹாங்கீரை பராமரித்து வரும் எலியமா பிலிப்பை மிரட்டி 1 கோடி ரூபாய் பணம் கேட்ட மர்ம நபர், அப்போது நடந்த மோதலில் எலியமாவின் கை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சத்தம் கேட்டு வந்த சைஃப் அலிகானையும் கத்தியைக் காட்டி மர்ம நபர் 1 கோடி ரூபாய் கேட்டதாகவும், அப்போது நடந்த மோதலில் சைஃப் அலிகானை 6 இடங்களில் மர்ம நபர் கத்தியால் குத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Saif Ali Khan | நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்கு வந்தது யார்? – திருடனா.. கொலைகாரனா? பின்னணி சம்பவங்கள்!

மோதலை தடுக்க முயன்ற மற்றொரு பணியாளரையும் கத்தியால் தாக்கி விட்டு மர்ம நபர் தப்பியோடியதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்ம நபர் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சைஃப் அலிகான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடந்தது அல்ல என போலீசார் தெளிவுபடுத்தி உள்ளனர்.



Source link