Last Updated:
நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார், அனிருத் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை டூப் வைத்து எடுத்தார்கள் என்று சிலர் வதந்தி பரப்பி வந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார், அனிருத் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கின்றனர். அதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதற்காக நெல்சன் திலீப் குமார் ஸ்டைலில் ஒரு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டனர்.
அதில் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சியை பில்டப் கொடுத்து, வீடியோவின் இறுதியில் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தனர். அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என சிலர் வதந்தி பரப்பி வந்தனர். அவர்களின் பேச்சு வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் பதில் அளித்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தின் உடல் மொழி, நடை என அனைத்தும் ரஜினிகாந்த் தான் என அவர்கள் சுட்டிக் காட்டி வந்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ விற்கான மேக்கிங் கை வெளியிட்டு இருக்கிறது. அதில் அனைத்து காட்சிகளிலும் ரஜினிகாந்த நடித்திருப்பதை வெளியிட்டு இருக்கின்றனர். ஏற்கனவே ரசிகர்கள் வதந்தி பரப்பி அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.
January 17, 2025 1:41 PM IST