Last Updated:

7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழிர்களின் குறைந்தபட்ச ஊதியம் தற்போது 18 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

8ஆவது ஊதியக்குழு

மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 8-வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விரைவில் 8-வது ஊதியக் குழுவின் தலைவரும், இரு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார். மேலும் 7-வது ஊதியக் குழுவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக் குழு அதற்கு முன்பாக பரிந்துரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியக் குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படவில்லை என்றாலும், அமைக்கப்படவிருக்கும் குழு ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.

8-வது ஊதியக் குழுவின் தாக்கம் அரசு ஊழியர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் வரை, முந்தைய ஊதியக் குழுவின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அடிப்படை ஊதியத்தில் கணிசமான உயர்வு இருக்கும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். கடைநிலை ஊழியர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஊதிய உயர்வு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 186 விழுக்காடு உயரும் ஊதியம்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்

ஊதிய உயர்வு கணிப்புகள்:

முந்தைய ஊதியக் குழுவின் அடிப்படையை வைத்து சில கணிப்புகள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு:

  • நிலை 1 (கடைநிலை ஊழியர்கள்): ரூ.18,000-ல் இருந்து ரூ.21,300 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
  • நிலை 2: ரூ.19,900-ல் இருந்து ரூ.23,880 ஆக உயர்த்தப்படலாம்.
  • நிலை 3: ரூ.21,700-ல் இருந்து ரூ.26,040 ஆக உயர்த்தப்படலாம்.
  • நிலை 4: ரூ.25,500-ல் இருந்து ரூ.30,600 ஆக உயர்த்தப்படலாம்.
  • நிலை 5: ரூ.29,200-ல் இருந்து ரூ.35,040 ஆக உயர்த்தப்படலாம்.
  • நிலை 6 முதல் 9 வரை (ஆசிரியர்கள், கிராம வளர்ச்சி அதிகாரிகள்): ரூ.35,400 முதல் ரூ.63,720 வரை உயர்த்தப்படலாம்.
  • நிலை 10 முதல் 12 வரை: ரூ.56,100 முதல் ரூ.94,560 வரை உயர்த்தப்படலாம்.
  • நிலை 13 மற்றும் 14: ரூ.1,23,100 முதல் ரூ.1,73,040 வரை உயர்த்தப்படலாம்.
  • நிலை 15 முதல் 18 வரை (ஐஏஎஸ் அதிகாரிகள்): ரூ.1,82,200 முதல் ரூ.3,00,000 வரை உயர்த்தப்படலாம்.

இந்த ஊதிய உயர்வு அடிப்படை ஊதியத்தில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி மற்றும் பிற படிகள் சேர்க்கப்படும் போது, ஊழியர்களின் மொத்த ஊதியம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

முக்கிய குறிப்பு: இது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. முந்தைய ஊதியக் குழுவின் அடிப்படையில் சில கணிப்புகள் மட்டுமே. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link