Last Updated:

சிம்ரன் முன்னதாக UP வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி, 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் 11. மோசமான அந்த ஆட்டத்தால் 2024 ஏலத்தில் அவர் விலை போகவில்லை.

News18

மகளிர் பிரீமியர் லீக் 2025 ஏலத்தில், மும்பையை சேர்ந்த ஆல் ரவுண்டர் வீராங்கனை சிம்ரன் ஷேக் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று மகளிர் பிரீமியர் லீக் (WPL) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2025 சீசனுக்கான WPL போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று (டிச.15) பெங்களூருவில் நடந்தது. இதில், அதிக விலைக்கு மும்பையை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீராங்கனை சிம்ரன் ஷேக் ஏலம் எடுக்கப்பட்டார். எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சிம்ரன் ஷேக்கை வாங்கியது. ஏலத்தில் சிம்ரன் ஷேக்கை வாங்க குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் குஜராத் ஜெயண்ட்ஸ் வென்றது.

சிம்ரன் ஷேக்கை வாங்கியது குறித்து பேசிய குஜராத் அணியின் பயிற்சியாளர் மைக்கேல் கிளிங்கர், “இந்தியாவின் உள்நாட்டு போட்டிகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதில் சிம்ரன் ஷேக் தனது ஹிட்டிங் பவர் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தனித்து நிற்கிறார். அவர் நல்ல சிக்ஸர்களை அடிக்கும் திறன்பெற்றவர். சிம்ரனை போன்றவர் எங்கள் அணியில் இருப்பது, அணியை நிறைவாக உணரவைக்கிறது” என்று கூறினார்.

இதற்கிடையே ஏலத்தை டிவியில் தனது குடும்பத்தினருடன் பார்த்துக் கொண்டிருந்த சிம்ரன் ஷேக் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதை அடுத்து உற்சாகத்தில் துள்ளி குதித்தார். குடும்பத்தினருடன் அவர் மகிழ்ச்சியில் திளைத்தார்.

Also Read | SIP முதலீடு மூலமாக 70 லட்ச ரூபாய் வீட்டை வெறும் 10 வருடங்களில் வாங்குவது எப்படி?

சிம்ரன் முன்னதாக UP வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி, 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் 11. மோசமான அந்த ஆட்டத்தால் 2024 ஏலத்தில் அவர் விலை போகவில்லை.

இதற்கிடையே தான், சமீபத்தில் முடிவடைந்த சீனியர் மகளிர் T20 டிராபியில் நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தினார். 11 ஆட்டங்களில் 176 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 47 ரன்கள் எடுக்க, அந்த ஆட்டத்தால் இப்போது குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.

மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய வீட்டு பெண் சிம்ரன் ஷேக். இவரின் தந்தை ஜாஹித், ஒரு வயர்மேன். சிம்ரன் உடன் சேர்த்து அவர் வீட்டில் எட்டு குழந்தைகள். மொத்தமாக 11 பேர் கொண்ட குடும்பம். தாராவியில் குறுகிய பகுதியில் இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் தங்கியுள்ள குடும்பத்தில் இருந்து தற்போது அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனையாக தனது உழைப்பால் உயர்ந்துள்ளார்.



Source link