சில திட்டங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும். இந்தச் சலுகையை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் Google அக்கவுன்ட்டை இணைக்க வேண்டும்.
யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்கும்போது, பலருக்கு விளம்பரங்கள் எரிச்சலூட்டுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு ஜியோவின் இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். தகுதியுடைய ஜியோ வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையின் மூலம் யூடியூப் வீடியோக்களை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்க்கலாம். அதாவது, யூடியூப் பிரீமியம் ஆனது எந்த விளம்பரங்களும் இல்லாமல், யூடியூப் வீடியோக்களைப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. மேலும், மல்டிடாஸ்கிங் செய்யும்போதும் யூடியூப் வீடியோக்களை பேக்கிரவுன்ட்டில் பார்க்கலாம்.
இது தவிர, உங்களுக்குப் பிடித்த யூடியூப் வீடியோக்களை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்து இன்டர்நெட் இல்லாதபோதும் பார்க்கலாம். யூடியூப் பிரீமியம் உள்ள வாடிக்கையாளர்கள், யூடியூப் மியூசிக் ஆப்ஸை அக்சஸ் செய்யலாம். இதிலும் எந்த விளம்பரமும் இல்லாமல் யூடியூப் மியூசிக் மூலம் பாடல்களைக் கேட்கலாம்.
யூடியூப் பிரீமியத்திற்கு ஜியோ வாடிக்கையாளர்கள் எவ்வளவு ரீசார்ஜ் செய்ய வேண்டும்?
24 மாதங்கள் யூடியூப் பிரீமியம் சலுகையைப் பெற, ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் பின்வரும் ரீசார்ஜ் திட்டங்களின் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோவின் கூற்றுப்படி, ஜியோஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்கள் ரூ.888, ரூ.1,199, ரூ.1,499, ரூ.2,499 மற்றும் ரூ.3,499 திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் இந்த நன்மைகளைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டங்களானது 30Mbps, 100Mbps, 300Mbps, 500Mbps மற்றும் 1Gbps போன்ற இன்டர்நெட் ஸ்பீடை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் அன்லிமிடெட் டேட்டா, ப்ரீ வாய்ஸ் காலிங், Netflix Basic, அமேசான் ப்ரைம் லிட், டிஸ்னி+ ஹாட் ஸ்டார், சோனி Liv மற்றும் Sea5 ஆகியவற்றுக்கான அக்சஸ் உடன் வருகிறது.
இதையும் படிக்க: உலகின் மிகப்பெரிய TCL QD Mini LED டிவி இந்தியாவில் அறிமுகம்… விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!
ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்கள் இலவசமாக யூடியூப் பிரீமியம் பெறுவது எப்படி?
தகுதியான ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் 24 மாதங்களுக்கு இலவசமாக யூடியூப் பிரீமியத்தைப் பெறுகிறார்கள். இதைப் பெற, MyJio ஆப்-ல் லாகின் செய்யவும் அல்லது Jio.comக்கு சென்று, அதன் தொடர்புடைய பேனரை கிளிக் செய்யவும். பின்னர், லாகின் செய்து உங்கள் கூகுள் அக்கௌன்ட்டை இணைக்கவும். உங்கள் அக்கௌன்ட் இணைக்கப்பட்டதும், யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆக்டிவேட் செய்யப்படும். தற்போது, யூடியூப்பின் தனிநபர் ப்ரீபெய்ட் திட்டத்திற்கான மாதாந்திர கட்டணம் ரூ.149, மாணவர் திட்டம் ரூ.89 மற்றும் குடும்பத் திட்டத்திற்கு ரூ.299 செலவாகிறது.
January 17, 2025 4:30 PM IST