ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் சமீபத்தில் அதன் புதிய டைரக்ட் டு செல் செயற்கைக்கோள் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனம், செயற்கைக்கோள்களிலிருந்து ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி இணைப்புகளை வழங்கவும், வழக்கத்தில் இருக்கும் செல் டவர்களைத் தவிர்த்து, கவரேஜ் இல்லாத பகுதிகளிலும் நீடித்த இணைப்பை வழங்குவதையும் உறுதிசெய்யும்படி இந்த தொழில்நுட்பம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு, பல பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஸ்டார்லிங்க் குழு தெரிவித்துள்ள நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலை மறுபதிவு செய்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்டார்லிங்க் தனது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வலையமைப்பை விரிவுப்படுத்துவதிலும், ராக்கெட்டுகளை ஏவுவதிலும், புதிய செயற்கைக்கோள்களை கூடுதல் வேகத்தில் நிலைநிறுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. ட்வீக்டவுன் அறிக்கையின்படி, இதன்மூலம் பயனர்கள் 250-350 Mbps வேகத்தில் இணைய சேவையை பெறுகின்றனர், இது தெற்கு ஆஸ்திரேலியா பிராந்தியத்தில் ஃபைபர் மூலம் கிடைக்கும் 50 முதல் 60Mbps ஐ விட அதிகமாக உள்ளது.
ஸ்டார்லிங்கின் டைரக்ட்-டு-செல் என்றால் என்ன?
வழக்கமான செல் டவர்களின் தேவையின்றி, நேரடியாக செயற்கைக்கோள் மூலம் ஸ்மார்ட்ஃபோன் இணைப்புகளை செயல்படுத்துவதால் இந்த தொழில்நுட்பம் ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம், கவரேஜ் இல்லாத பகுதிகளிலும் தடையற்ற இணைப்பை வழங்குவதை உறுதி செய்கிறது. 2025-ம் ஆண்டில் இந்த தொழில்நுட்பம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது செயற்கைக்கோள்களின் விரைவான வரிசைப்படுத்துதலைத் தொடர தயாராக உள்ளது. ஏற்கனவே உள்ள மொபைல் நெட்வொர்க்குகளுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், எந்த ஒரு சிறப்பு வன்பொருளோ அல்லது ஆப்களோ இல்லாமல் குறுஞ்செய்தி, அழைப்பு மற்றும் டேட்டா சேவைகளை வழங்குவதை இது உறுதி செய்கிறது.
Also Read : வீடியோ வெளியிட்டு ஆண்டுக்கு ரூ.367 கோடி சம்பாதித்த இளம்பெண் – யார் தெரியுமா?
மொபைல் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதுடன், நிலப்பரப்பில் கவரேஜ் இல்லாத இடங்களில், எங்கும் பரவி கிடைக்கும் வகையில், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) இணைப்பை இயக்கும் டைரக்ட் டு செல், உலகளாவிய தொழில்களில் முக்கியமாக மில்லியன் கணக்கான சாதனங்களை இணைக்கிறது. எனினும், இதற்கு எந்தவித கூடுதல் வன்பொருளும் தேவையில்லை என்று ஸ்பேஸ்எக்ஸ் கூறுகிறது.
அவசர காலங்களில், கிராமப்புறங்களில், அல்லது பொதுவாக தொடர்பு கொள்ள முடியாத மண்டலங்களில் உள்ள பாதிக்கப்படும் பகுதிகளில் பயணிக்கும் போது, பயனர்கள் தடையற்ற இணைப்பை பெறுவதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு டிஜிட்டல் பிளவைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, உலகளாவிய கவரேஜை வழங்குவது மற்றும் உலகளவில் தகவல்தொடர்பு நம்பகத்தன்மையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
வரவிருக்கும் மாதங்களில், அடுத்த தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், 2Gbps க்கும் அதிகமான வேகத்தை வழங்குவதை நிறுவனம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் பிளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒரு விரிவான செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்குவதற்கான ஸ்பேஸ்எக்ஸின் அர்ப்பணிப்பை, தற்போதைய விரிவாக்கம் கோடிட்டுக் காட்டுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, உலகின் அதிநவீன ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களைத் தயாரித்து ஏவுகிறது. இதன் மூலம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை டைரக்ட் டு செல் தொழில்நுட்பத்திற்காக நிலைநிறுத்துகிறது. இந்த டைரக்ட் டு செல் செயற்கைக்கோள்கள் முதலில் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மற்றும் பின்னர் ஸ்டார்ஷிப்பால் (Starship) ஏவப்படும்.
சுற்றுவட்டப் பாதையில், செயற்கைக்கோள்கள் உடனடியாக லேசர் பிணைப்பின் மூலம் உலகளாவிய இணைப்பை வழங்க ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டத்துடன் இணைக்கப்படும். எனவே, இந்த அம்சம் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
November 30, 2024 11:00 AM IST