Last Updated:
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்று எதிர்பார்த்த லபுஷேன் விக்கெட்டை நிதிஷ் குமார் ரெட்டி வீழ்த்த, 75 ரன்களுக்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் விளாசினார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனின் GABBA மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் போட்டி தொடங்கிய நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது நாளான இன்று அரைமணி நேரம் முன்னதாகவே போட்டி தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி 28 ரன்களுடன் ஆஸ்திரேலியா விளையாடத் தொடங்கிய நிலையில், பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்று எதிர்பார்த்த லபுஷேன் விக்கெட்டை நிதிஷ் குமார் ரெட்டி வீழ்த்த, 75 ரன்களுக்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் – ஸ்மித் இணை பொறுப்பாக விளையாடினர். சரிவிலிருந்த ஆதிரேலிய அணியை அடுத்தடுத்த சதத்தின் மூலம் இருவரும் மீட்டனர்.
தற்போது ஸ்மித் 100 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர். முதல் நாள் ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சிலேயே வலுவாக இருப்பது, போட்டி டிராவை நோக்கியோ அல்லது ஆஸ்திரேலியாவின் வெற்றியை நேக்கியோ செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read: அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா… டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்…
இந்திய பவுலர்கள் தரப்பில், பும்ரா 2 விக்கெட்டும், நிதிஷ் குமார் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
December 15, 2024 11:24 AM IST