பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனவரி 21 ஆம் திகதி நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மு.ப. 11.30 முதல் பி.ப. 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்று, 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
The post ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம் appeared first on Daily Ceylon.