Last Updated:
கௌதம் மேனன் திரைப்படத்தில் விஷால் நடிக்க உள்ளார் என பல மாதங்களாக செய்தி வெளியாகி வந்தன.
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் அஜய் ஞானமுத்து படங்களில் நடிக்க உள்ளதாக விஷால் அறிவித்திருக்கிறார்.
நடிகர் விஷாலின் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஷால், தனது அடுத்த அடுத்த படங்களை பற்றி கூறினார். அதில் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் அஜய் ஞானமுத்து ஆகியோரின் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.
கௌதம் மேனன் திரைப்படத்தில் விஷால் நடிக்க உள்ளார் என பல மாதங்களாக செய்தி வெளியாகி வந்தன. அதை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து உடன் கூட்டணி அமைக்க உள்ளதை பற்றியும் முதன்முறையாக அறிவித்திருக்கிறார். அதே சமயம் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஆம்பள திரைப்படத்தை மறு வெளியீடு செய்வது குறித்து பரிசளித்து வருவதாகவும் விஷால் கூறினார்.
January 17, 2025 5:19 PM IST