Last Updated:

மழை கடுமையாக குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

மைதானத்தில் பெய்யும் கனமழை

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மைதானத்தை ஒட்டியுள்ள பகுதியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

Also Read: கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிரச்னையா? அஷ்வின் ஓய்வு அறிவித்ததன் பின்னணி என்ன?

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் மழை குறுக்கிட்டதால் தொடர்ந்து 2 முறை ஆட்டத்தை நடுவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

13.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை கடுமையாக குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். மைதானத்தையொட்டி இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடர கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்த போட்டி பெரும்பாலும் டிராவில் முடிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த போட்டி டிராவில் முடிந்தாலும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் நிலையில் எந்த மாறுபாடும் ஏற்படாது. அதே நேரம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் புள்ளிகள் குறையக்கூடும்.

இதையும் படிங்க – Gukesh Heritage: குகேஷுக்கு தெலுங்கு அடையாளம் கொடுத்த சந்திரபாபு நாயுடு.. பொங்கி எழுந்த தமிழ்நாட்டினர்!

கடைசி 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற முடியும்.



Source link