Last Updated:

Smart phones | ரூ.10,000 விலையில் நீங்கள் வாங்க கருத்தில் கொள்ளக்கூடிய சில சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

News18

இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் பல உள்ளன. இருப்பினும் ரூ.10,000 பட்ஜெட்டிற்குள் 5G கனெக்டிவிட்டியோடு வரும் ஸ்மார்ட்ஃபோன்கள் மிக குறைவாகவே உள்ளன. ரூ.10,000 விலையில் நீங்கள் வாங்க கருத்தில் கொள்ளக்கூடிய சில சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

ஐக்யூ இசட்9 லைட் (iQOO Z9 Lite):

iQoo Z9 lite 5g - Unboxing 🔥| Rs 10000 | Gaming Processor 🎮| Best Camera  📸| 128gb storage ⚡️ - YouTube

இந்த மொபைல் 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 840 nits பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்ட 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் MediaTek Dimensity 6300 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14-ல் இயங்குகிறது. இந்த மொபைல் 6GB LPDDR4x ரேம் மற்றும் 128GB வரையிலான eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மூலம் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கிக் கொள்ளலாம். இது பின்புறம் 50MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 2MP டெப்த் சென்சார் உட்பட டூயல் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 8MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. தவிர, Z9 Lite 5G மொபைல் சைட் மவுண்ட்டட் ஃபிங்கர்-பிரிண்ட் சென்சாரைக் கொண்டுள்ளது. 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP64 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 45 5ஜி (Moto G45 5G):

Moto G45 5G launched in india price under 10000 rupees specifications features Snapdragon 6s Gen 3 5000mAh battery | Jansatta

இந்த மொபைல் 6.45-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120Hz வரை ரெஃப்ரஷ் ரேட் , 500nits பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இதில் Qualcomm Snapdragon 6s Gen 3 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கிக் கொள்ளலாம். 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Motorola’s UX skin-ல் இயங்குகிறது. மேலும் இந்த மொபைலுக்கு 3 வருட செக்யூரிட்டி பேட்சஸ் அளிக்கலாம் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G):

Infinix Hot 50 5G: Review of Specifications & FAQs - DevOm Pro

120Hz புரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.7-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ள இந்த மொபைலில் MediaTek Dimensity 6300 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 8GB LPDDR4x ரேம் மற்றும் UFS128GB வரையிலான ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த மொபைலில் 48MP Sony IMX582 ப்ரைமரி சென்சார் மற்றும் டூயல் LED ஃபிளாஷ் கொண்ட டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்காக 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான XOS 14.5-ல் இயங்குகிறது. டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP54 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்க் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி இதில் உள்ளது.

ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G):

realme C63 5G - realme (India)

ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட Realme UI 5.0-ல் இயங்கும் இந்த மொபைல் 120Hz வரையிலான டைனமிக் ரெஃப்ரஷ் ரேட், 240Hz டச் சேம்ப்ளிங் ரேட் மற்றும் 625nits. பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் Octa-Core MediaTek Dimensity 6300 6nm ப்ராசஸர் உள்ளது. இந்த மொபைலில் 8GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128GB வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் 2TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கிக் கொள்வதற்கான சப்போர்ட் உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியுடன் இந்த மொபைல் வருகிறது.

டெக்னோ பாப் 9 5ஜி (Tecno Pop 9 5G):

पापा के परियों के लिए Tecno का सबसे सस्ता 5G स्मार्टफोन हुआ लॉन्च, कीमत जानकर उड़ जाएंगे आपके होश

இந்த டூயல் சிம் சப்போர்ட் மொபைலானது 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட LCD ஸ்கிரீனைக் கொண்டுள்ளது மற்றும் MediaTek Dimensity 6300 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 4GB ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. பின்புறத்தில் 48MP சோனி ஐஎம்எக்ஸ் 582 சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது. 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி உள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP54 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது. மேலும், NFC சப்போர்ட்டைகொண்டுள்ள ரூ.10,000 விலை பிரிவில் உள்ள முதல் 5G ஸ்மார்ட்போன் இதுவாகும்.



Source link