Last Updated:

இந்திய அணி 1974 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தொடக்க காலங்களில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் செல்பாடுகள் குறிப்பிடும் வகையில் இல்லை.

இந்திய அணி

நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த மோசமான ரிக்கார்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சில ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்ற போதிலும், உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா விளையாட தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

து போதாதென்று. இந்திய அணி 2024ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 1979க்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாதது இதுவே முதல்முறை மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகும்.

இந்திய அணி 1974 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தொடக்க காலங்களில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் செல்பாடுகள் குறிப்பிடும் வகையில் இல்லை. 1980ஆம் ஆண்டு தொடங்கிய இந்திய கிரிக்கெட்டின் வெற்றிப் பயணம் 2023ஆம் ஆண்டு வரை நீடித்தது.

2024 இல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. நடப்பு ஆண்டில் மொத்தமே 3 போட்டிகளில்தான் இந்திய அணி விளையாடியது.

இதையும் படிங்க – யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஓய்வுக்கு பின்னர் எப்படி சம்பாதிக்கிறார்?

விராட் கோலி உள்பட அனைத்து நட்சத்திர வீரர்களுடன், ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இலங்கை சென்றது. ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் இலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியது. தொடரின் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டதன்மூலம் 2024ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாத அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி தற்போது ஏற்படுத்தியுள்ளது.



Source link