Last Updated:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் வரும் சனிக்கிழமை அன்று தொடங்க உள்ளது.

News18

இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு ஒரு விஷயத்தை சரி செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன.

ஆஸ்திரேலியாவை விடவும் இந்திய அணிக்கு இந்த கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த தொடரை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். இன்னும் 3 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி அவை அனைத்திலும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியதாவது, ”இந்திய அணி வலுவான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு வரும் டெஸ்ட் போட்டிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது தான். ஒரு இன்னிங்ஸில் 300 முதல் 350 ரன்கள் வரை பேட்ஸ்மேன்கள் எடுத்துக் கொடுத்தால் மட்டுமே, பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எதிரணியின் விக்கெட்டுகளை சாய்க்க முடியும். பந்துவீச்சில் இந்திய அணி மோசமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க – இந்திய அணியால் எளிதில் நெருங்க முடியாத சாதனை… டெஸ்ட் வரலாற்றில் உச்சம்தொட்ட இங்கிலாந்து…

முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்  ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் வரும் சனிக்கிழமை அன்று தொடங்க உள்ளது.



Source link