தங்களது வருமானத்தை சேமிக்கும் விதமாக, மக்கள் பல்வேறு முதலீட்டு விருப்பங்களை தேடி வருகின்றனர். அந்த வகையில், மக்களின் வசதிக்கு ஏற்ப வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இந்திய தபால் அலுவலகம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் மாதாந்திர சேமிப்பு, நிலையான வைப்புத்தொகை, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு விருப்பங்களை வழங்கி வருகின்றன. இன்னும் பலர், தங்கத்தின் மீதும், ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்கிறார்கள்.

எந்த ஒரு முதலீடு, மக்களுக்கு ஆபத்தை நீக்கி முழு பாதுகாப்பையும், நல்ல சேமிப்பு விருப்பங்களையும் வழங்குகிறதோ அதுவே சிறந்த சேமிப்புத் திட்டமாகும். அந்த வகையில், மத்திய அரசு வழங்கிவரும் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டம் குறித்த விரிவான தகவல்களை நாம் இங்கே பார்க்கலாம்.

ஏற்ற இறக்கமான முதலீட்டு விருப்பங்களுக்கு மத்தியில், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) செல்வத்தை உருவாக்குவதற்கான பாதுகாப்பான மற்றும் வரிச் சலுகை கொண்ட சிறந்த திட்டமாக இருந்து வருகிறது. மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் நிலையான வருமானத்தையும், ஏராளமான நன்மைகளையும் பெற முடியும். இது ஆபத்தில்லாத முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் என்றால் என்ன?

தனிநபர்களிடையே சிறுசேமிப்பை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் நிலையான வருமான முதலீட்டு முறைகளில் ஒன்று தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் ஆகும். இதில் முதலீடு செய்வதன் மூலம், உறுதியான வருமானத்தை பெறுவதோடு, வருமான வரியில் 80C-இன் கீழ் முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளை பெறவும், கூடுதல் சேமிப்பை உருவாக்கவும் உதவுகின்றன.

ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்துடன், பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உருவாக்க விரும்புவோருக்கு தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் ஓர் நம்பகமான விருப்பமாக இருக்கும்.

ஜனவரி – மார்ச் 2025 காலாண்டிற்கான வட்டி விகிதம்

ஜனவரி – மார்ச் 2025 காலாண்டில், தேசிய சேமிப்புச் சான்றிதழ்களுக்கான வட்டி விகிதம் 7.7%ஆக உள்ளது, இதற்கு ஆண்டுதோறும் கூட்டு வட்டியும் வழங்கப்படுகிறது. டிசம்பர் 31, 2024 அன்று பொருளாதார விவகாரத் துறையின் அறிவிப்பின்படி, இந்த விகிதம் முந்தைய காலாண்டில் இருந்து மாறாமல் உள்ளது.

இதையும் படிக்க: நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரர்… யார் இந்த பினோத் சவுத்ரி?

இந்த நிலையான வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு நிலையான மற்றும் கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும், முதிர்ச்சியடைந்த பிறகு, முதலீடு கணிசமாக வளர்ந்து, அசல் மற்றும் வட்டி இரண்டையும் வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்

தகுதி: தேசிய சேமிப்புச் சான்றிதழ்களை தனிநபர்கள், கூட்டுக் கணக்கு (அதாவது ஜாய்ண்ட் அக்கவுண்ட்) வைத்திருப்பவர்கள் (மூன்று பெரியவர்கள் வரை) மற்றும் மைனர்கள் அல்லது மனநிலை சரியில்லாத நபர்களின் சார்பில், அவர்களின் பாதுகாவலர்கள் வாங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் தங்கள் சொந்த பெயரில் கணக்கைத் திறக்கலாம்.

இதையும் படிக்க: Har Ghar Lakhpati: சீக்கிரமா லட்சாதிபதியாக SBI தரும் சான்ஸ் இதுதான்…! தவறாம யூஸ் பண்ணிக்கோங்க…

முதலீட்டு வரம்புகள்: இதில், குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1,000 ஆகும். பின்னர், நமது விருப்பத்திற்கேற்ப ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட முழு தொகைகளை முதலீடு செய்யலாம். இதற்கு அதிகபட்ச முதலீட்டு தொகை என எந்த உச்சவரம்பும் கிடையாது, மேலும் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு கணக்குகளைத் திறந்து கொள்ளலாம்.

உறுதிமொழி: வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் கணக்குகளை பாதுகாப்பாக அடகு வைக்கலாம். கணக்கு வைத்திருப்பவரின் மரணம் அல்லது நீதிமன்ற உத்தரவு போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பணப் பரிமாற்றங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

வரி நன்மைகள்

தேசிய சேமிப்புச் சான்றிதழ்களின் வைப்புத்தொகைக்கு, வருமான வரி சட்டப் பிரிவு 80Cஇன் கீழ், ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும்.

இதையும் படிக்க: சரியும் இந்திய நாணயம்.. குறையும் ஏற்றுமதி – மோசமான நிலையில் உள்ள இந்திய பொருளாதாரம்

வங்கியைப் பொறுத்து 6.5% முதல் 7.75% வரையிலான விகிதங்களை வழங்கும் வரி சேமிப்பு நிலையான வைப்புத் தொகைகளுடன் ஒப்பிடுகையில், நிலையான வருமானத்தை ஈட்ட நினைப்பவர்களுக்கு தேசிய சேமிப்புச் சான்றிதழின் 7.7% விகிதம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link