Last Updated:

27 வயதாகியுள்ள ரின்கு சிங், கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 2 ஓடிஐ, 30 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 562 ரன்களை எடுத்துள்ளார்.

ரிங்கு சிங் – ப்ரியா சரோஜ்

மக்களவை உறுப்பினர் ப்ரியா சரோஜ்க்கு ரிங்கு சிங்குடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்ற தகவலை ப்ரியாவின் தந்தை துஃபானி சரோஜ் மறுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினரான ப்ரியா சரோஜ் ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடக்கும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், ப்ரியா சரோஜ்ஜின் தந்தையும், சட்டமன்ற உறுப்பினருமான துஃபானி சரோஜ், இதுகுறித்து பேசும்போது, ரிங்கு சிங்கின் குடும்பம் இந்த திருமணம் குறித்து கேட்டுள்ளதாகவும், அதை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிச்சயம் நடைபெற்றது என்ற தகவலில் உண்மையில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

தங்களின் மூத்த மருமகன் மூலம் ரிங்கு சிங்கின் குடும்பம் இந்த விருப்பத்தை தெரிவித்ததாகவும், இன்னும் இதுகுறித்தான முடிவை எடுக்கவில்லை என்றும் துஃபானி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு.. யார் யாருக்கு வாய்ப்பு?

27 வயதாகியுள்ள ரிங்கு சிங், கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 2 ஓடிஐ, 30 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங், சர்வதேச போட்டிகளில் 562 ரன்களை எடுத்துள்ளார். மேலும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணியில் இவரது பினிஷிங் திறமை இவரை பிரபலப்படுத்தியது.

மறுபுறம் 26 வயதான ப்ரியா சரோஜ், உத்தரப்பிரதேசத்தின் மச்சிலிஷஹர் தொகுதி எம்.பி ஆக உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் BP சரோஜை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ப்ரியா, சட்ட பட்டதாரி ஆவார். அவரின் தந்தை துஃபானி சரோஜ், மூன்று முறை எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ளார். தனது அரசியல் பயணத்தைப் பற்றி ப்ரியா, ஒரு நேர்காணலின் போது கூறியபோது, “நான் முதலில் நீதிபதியாக வேண்டும் என்பதற்காக சட்டப் படிப்பு முடித்தேன். கோவிட் நேரத்தில் நீதிபதி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், எனது தந்தையின் அறிவுறுத்தலின்படி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தேன்,” என்று தெரிவித்தார்.



Source link