Last Updated:
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ANCஆனது 13.6 mm டைனமிக் பாஸ் டிரைவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 50DB வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC)க்கான ஆதரவைக் கொண்டுள்ளது
ரியல்மி நிறுவனம் அதன் புதிய ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் புதிய நெக்பேண்ட் ரியல்மீ பட்ஸ் வயர்லெஸ் 5 ANCஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நெக்பேண்ட் ஸ்டைல் வயர்லெஸ் ஹெட்செட்கள் 13.6 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், 50DB வரை ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சிலேஷன் செய்வதை ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. இது முழு சார்ஜில் 38 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர விரைவான சார்ஜிங் அம்சத்துடன் டூயல் டிவைஸ் இணைப்புக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ANC விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ANCஇன் விலை ரூ.1,799 ஆகும். ஆனால், தள்ளுபடியுடன் இதை ரூ.1,599 விலைக்கு வாங்கலாம். இது அமேசான், பிளிப்கார்ட், ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளில் ஜனவரி 23ஆம் தேதி மதியம் 12 மணி முதல் கிடைக்கும். இதை டான் சில்வர், மிட்நைட் பிளாக் மற்றும் ட்விலைட் பர்ப்பிள் ஆகிய மூன்று வண்ண வகைகளில் வாங்கலாம்.
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ANC: விவரக் குறிப்புகள்
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ANCஆனது 13.6 mm டைனமிக் பாஸ் டிரைவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 50DB வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC)க்கான ஆதரவைக் கொண்டுள்ளது மற்றும் த்ரீ அடாப்டிவ் நாய்ஸ் ரிடக்ஷன் லெவலை உள்ளடக்கியுள்ளது. கால் கிளாரிட்டிக்காக, இது என்வைரான்மென்டல் நாய்ஸ் கேன்சிலேஷன் (ENC)க்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
ரியல்மியின் சமீபத்திய நெக்பேண்டில் 360 டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ அனுபவத்திற்கான ஆதரவும் உள்ளது. தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பாக இருக்க, இது IP55 தர மதிப்பீட்டுடன் வருகிறது. இணைப்பை பொறுத்தவரையில், இது புளூடூத் 5.4 மற்றும் டூயல் டிவைஸ் இணைப்புக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. தவிர 45ms லோ லேடன்சியைக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: டிராய் அதிகாரிகள்போல் அழைத்து பணம் பறிக்கும் கும்பல்…! மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி…?
ANC ஆஃப் -ல் இருக்கும்போது, முழு சார்ஜில் 38 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும், ANC ஆன்-இல் இருக்கும்போது, 20 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. மேலும் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது. அதாவது 10 நிமிடங்களில் சார்ஜ் செய்தால், 50 சதவீத வால்யூமில் 20 மணி நேரம் பிளேபேக் நேரத்தைக் கொடுக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.
January 18, 2025 12:42 PM IST