Last Updated:

Sheikh Hasina | “ரெஹானாவும் நானும் உயிர் பிழைத்தோம். 20-25 நிமிடங்களுக்குள் நாங்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட்டோம்” என்று அவாமி லீக்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஆடியோ செய்தியில் ஹசீனா கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனா

தன்னை கொலை செய்ய பல முறை முயற்சிகள் நடந்ததாகவும், வெறும் 20 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பியதாகவும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா பேசிய ஆடியோ பதிவு ஒன்று வங்கதேச அவாமி லீக் கட்சியின் சமூகவலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கொதலிபாராவில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதியும் படுகொலை முயற்சி நடந்ததாகக் கூறியுள்ள அவர், தனது வீடு உட்பட அனைத்தும் எரியூட்டப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஷேக் ஹசீனா பேசும்போது, தானும், தனது சகோதரியும் வெறும் 20 முதல் 25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பி வந்ததாகவும் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… நாளை முதல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்..!

மேலும் தனக்கு எதிராக பல கொலைச் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், நான் இதுவரை உயிர் பிழைத்தது அல்லாஹ்வின் விருப்பம் என்று நான் உணர்கிறேன். இல்லையெனில், நான் உயிர் பிழைத்திருக்க முடியாது” என்றும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/உலகம்/

Sheikh Hasina | “என்னை கொல்ல சதி; 25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பித்தேன்” – பகீர் ஆடியோவை வெளியிட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா!



Source link