Last Updated:

Mayiladuthurai Exhibition: பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான மக்கள் மயிலாடுதுறை பொருட்காட்சிக்கு வருகை தருகின்றனர்.

X

குழந்தைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குஷி தான்… பொருட்காட்சியில் திரளும் மக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரோட்ரி சங்கங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி தருமை ஆதீனம் கலைக்கல்லூரி மைதானத்தில் போடப்பட்டுள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் பலவகை ராட்டினங்கள் உள்ளன. மேலும், டெல்லி அப்பளம், பஞ்சு மிட்டாய், கோபி 65 என உணவுகளை ருசித்து மகிழவும் பொதுமக்கள் வருகை தந்தனர்.

மேலும் பெண்களுக்குத் தேவையான ஜிமிக்கி கம்மல், வளையல் என நிறையக் கடைகளும் இருந்தது. குழந்தைகளுக்குப் புல்லாங்குழல், மாஸ்க், உள்ளிட்ட பல்வேறு கடைகள் போடப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ நிறைய கேம்ஸ்கள் இடம்பெற்றிருந்தன.

இதையும் படிங்க: Food Festival: மக்ரூன் முதல் மட்டன் கறி தோசை வரை… விருதுநகர் மக்களுக்கு விருந்து வைத்த உணவுத் திருவிழா…

மேலும் இந்த பொருட்காட்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களின் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இந்த பொருட்காட்சியில் தினந்தோறும் வரும் பொதுமக்களை மகிழ்விக்க இசை, நடனம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் நடைபெற்று வருகிறது.

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் பொருட்காட்சிக்கு வருகை தருகின்றனர். மேலும், இந்த பொருட்காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link