Last Updated:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா நடித்த ”டாக்கு மகராஜ்” திரைப்படம் கடந்த 12ஆம் தேதி ஆந்திரா முழுவதும் வெளியானது.

News18

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் திரைப்படம் வெற்றி பெற வேண்டி ஆட்டு கிடா பலி கொடுத்த ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா நடித்த ”டாக்கு மகராஜ்” திரைப்படம் கடந்த 12ஆம் தேதி ஆந்திரா முழுவதும் வெளியானது.

திருப்பதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் அந்த படம் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் திரையரங்கு முன்பு ஆட்டு கிடாவை வெட்டி பலி கொடுத்து, பாலகிருஷ்ணா போஸ்டர் மீது ஆட்டு ரத்தத்தை தெளித்தனர்.

இதையும் படிங்க – ‘மதகஜராஜா ரிலீசாக உதவியவர்களுக்கு பாராட்டுவிழா நடத்த வேண்டும்’ – தயாரிப்பாளர் கே.ஆர். வலியுறுத்தல்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் மீது பீட்டா அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், பொதுவெளியில் ஆட்டை பலி கொடுத்ததாக சங்கரய்யா, ரமேஷ், சுரேஷ் ரெட்டி, பிரசாத், லோகேஷ் ஆகிய ஐந்து பேர் மீது  திருப்பதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Source link