Last Updated:
இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை, வேலைவாய்ப்பு மற்றும் பிரிட்டனின் முன்னேற்றத்துக்கு உதவும்.
19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று துவங்கியது. இரண்டு தினங்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரியோவுக்கு சென்றார்.
இதற்காக பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், பிரேசில் நாட்டில் இருக்கும் இந்தியர்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு இடையில் இந்திய பிரதமர் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை வரும் புத்தாண்டு முதல் மீண்டும் தொடங்கும் என்று இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் உறுதியளித்தார்.
“இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை, வேலைவாய்ப்பு மற்றும் பிரிட்டனின் முன்னேற்றத்துக்கு உதவும். உலகின் 5-வது பொருளாதார நாடான இந்தியா, தங்கள் நாட்டின் மிக முக்கிய பங்காளர்.
பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது” என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
November 19, 2024 10:03 PM IST
“வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்” – பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் உறுதி