Last Updated:

கிரெடிட் கார்டுகள் பயணிகள் மத்தியில் பிரபலமான தேர்வாகி விட்டன. ஏனெனில், அவை சிறந்த சலுகைகள் மற்றும் பிரத்யேக தள்ளுபடிகளை வழங்குகின்றன.

News18

நீங்கள் அடிக்கடி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்களா? இவ்வாறு அடிக்கடி ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் நபர்களுக்காக ஒரு சலுகை உள்ளது. அதற்கு உங்களிடம் கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டை இருந்தால் போதும். ஒவ்வொரு புக்கிங்கிலும் சிறந்த தள்ளுபடியைப் பெறலாம். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

கிரெடிட் கார்டுகள் பயணிகள் மத்தியில் பிரபலமான தேர்வாகி விட்டன. ஏனெனில், அவை சிறந்த சலுகைகள் மற்றும் பிரத்யேக தள்ளுபடிகளை வழங்குகின்றன. சரியான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது உங்கள் ரயில் பயணத்தை மலிவாகவும், வசதியாகவும் மாற்றும்.

இருப்பினும், எந்தவொரு கார்டையும் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் நன்மைகள் மற்றும் வரம்புகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். ரயில் பயணத்தின் மூலம் உங்கள் விடுமுறை நாட்களை திட்டமிடுகிறீர்கள் என்றால், ஒரு சிறப்பு பயணக் கிரெடிட் கார்டுகள் உங்கள் சேமிப்பை பன்மடங்கு அதிகரிக்கலாம். இந்த கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், கேஷ்பேக், ரயில்வே லவுஞ்ச் அணுகல் மற்றும் ரிவார்டு பாயிண்ட்ஸ் போன்ற பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

சிறந்த ரயில் பயண கிரெடிட் கார்டுகள்:

1. எஸ்பிஐ ஐஆர்சிடிசி பிளாட்டினம் கிரெடிட் கார்டு

  • ஐஆர்சிடிசி முன்பதிவுகளுக்கு 1.8% பரிவர்த்தனை கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • AC1, AC2, AC3 போன்ற ஏசி கோச்கள் மற்றும் சேர் கார் முன்பதிவுகளில் 10% வால்யூபேக் ரிவார்டு பாயிண்ட்ஸ்களாகப் பெறலாம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் இலவச ரயில்வே லவுஞ்ச் வசதி உள்ளது.
  • மற்ற பரிவர்த்தனைகளிலும் SBI ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்கின்றன.
  • ரூ.125 (எரிபொருள் பரிவர்த்தனை தவிர்த்து) ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1 ரிவார்டு பாயிண்ட்டைப் பெறுங்கள்.

2. ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கிரெடிட் கார்டு:

  • வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் 20,000 ரிவார்டு பாயிண்ட்டைப் பெறலாம்.
  • ஒவ்வொரு முறையும் உங்கள் மெம்பர்ஷிப்பை புதுப்பிக்கும்போது 5,000 போனஸ் பாயிண்ட்டைப் பெறலாம்.
  • ஒவ்வொரு காலாண்டிற்கும் இரண்டு காம்ப்ளிமெண்டரி உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அக்சஸைப் பெறலாம்.
  • வெப்சைட் மூலம் ஏர் இந்தியா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது பிரத்யேக சலுகைகளைப் பெறலாம்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
  • இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கான வருடாந்திர கட்டணம் ரூ.4,999 ஆகும். மெம்பர்ஷிப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.4,999 ஆகும்.

இதையும் படிக்க: சட்டவிரோதமாக கடன் வழங்குவோருக்கு 10 ஆண்டுகள் சிறை… சட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு

3. கோடக் ராயல் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு:

  • IRCTC முன்பதிவுகளில் ரூ.500 வரை தள்ளுபடி கிடைக்கும்.
  • கார்டு மூலம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 4X ரிவார்டு பாயிண்ட்களைப் பெறலாம்.
  • ரூ.500 முதல் ரூ.3,000 வரையிலான அனைத்து எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கும் 3% வரை தள்ளுபடி கிடைக்கும்.
  • விமான நிலையத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களிலும் இலவச லவுஞ்ச் அக்சஸைப் பெறலாம்.
  • இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கான வருடாந்திர கட்டணம் இல்லை. ஆனால், மெம்பர்ஷிப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.999 ஆகும்.

4. HDFC பாரத் கேஷ்பேக் கிரெடிட் கார்டு:

  • இந்த கார்டு மூலம் IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவுகள், யுடிலிட்டி பேமென்ட்ஸ் மற்றும் எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு 5% உடனடி கேஷ்பேக்கை பெறலாம்.
  • நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் பம்ப்களிலும் இந்த கார்டு மூலம் 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடியைப் பெறலாம்.
  • பிக் பர்சேஸ் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு விரைவான EMI விருப்பங்களைப் பெறலாம்.
  • EasyEMI, PayZapp மற்றும் SmartBUY மூலம் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 5% கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும்.

இதையும் படிக்க: சிபில் vs கிரெடிட் ஸ்கோர்: கடன் வாங்குவதற்கு இரண்டில் எது தேவை?

ரயில் பயண கிரெடிட் கார்டுகளானது பயணத்தின்போது உங்கள் பணத்தை சேமிக்க ஒரு சிறந்த வழியாகும். அதே நேரத்தில் கார்டை தேர்ந்தெடுக்கும் முன்பு, அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து சிறந்த பலனைப் பெறலாம் மற்றும் அதிக பணத்தை சேமிக்கலாம்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்த கிரெடிட் கார்டுகள் உங்க கிட்ட இருக்கா…? ரயில் டிக்கெட் முன்பதிவில் கேஷ்பேக் கன்ஃபார்ம்…!



Source link