Last Updated:

ஜி20 உச்சி மாநாட்டிற்கு இடையே பல்வேறு நாட்டுத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

News18

19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று துவங்கியது. இரு தினங்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரியோவுக்கு சென்றார்.

இதற்காக பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், பிரேசில் நாட்டில் இருக்கும் இந்தியர்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடனான சந்திப்பின் போது விண்வெளி, எரிசக்தி, செயற்கை தொழில்நுட்பம் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தார்.

இதேபோன்று இத்தாலி பிரதமர் மெலோனியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர்.

போர்ச்சுக்கல் பிரதமர் லூசிஷ் மார்டின்ஸை சந்தித்தும் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான உறவின் 50-வது ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : Jharkhand Elections 2024 Phase 2: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எப்போது வெளியாகும்?

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி (Abdel Fattah El-Sisi), இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (Prabowo Subianto), நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Støre) ஆகியோரையும் தனித்தனியாக பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அத்துடன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியெனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.



Source link