Last Updated:

1981 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ், யோக்ராஜ் சிங்கை காரணம் இன்றி இந்திய அணியில் சேர்க்காமல் தவிர்த்ததாக குற்றம் சாட்டினார்.

News18

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த கபில்தேவை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சித்ததாக யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1981 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ், யோக்ராஜ் சிங்கை காரணம் இன்றி இந்திய அணியில் சேர்க்காமல் தவிர்த்ததாக குற்றம் சாட்டினார். ஆத்திரத்தில் கபில்தேவ் வீட்டுக்கு சென்று கடுமையான வார்த்தைகளால் திட்டியபோது, கபில்தேவின் தாய் வெளியே வந்ததாகவும், இதனால் கபில்தேவை சுடாமல் விட்டுவிட்டு வந்ததாகவும் யோக்ராஜ் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

அதில், “கபில் தேவ், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்தபோது காரணமின்றி என்னை அணியில் இருந்து நீக்கினார். கோபத்தில் கபில்தேவை சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றேன். அப்போது கபில்தேவ் அவர் தாயுடன் வெளியே வந்தார். கபில்தேவ்விடம் ‘உங்கள் அருகில் பக்திமிக்க தாயார் இருப்பதால் துப்பாக்கியால் சுடவில்லை’ என்று சொல்லி அங்கிருந்து திரும்பினேன்” என்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார்.

Also Read | ரோகித், விராட் கோலிக்கு மீண்டும் வாய்ப்பா? – பிசிசிஐ கூட்டத்தில் எடுத்த முடிவு.. வெளியான தகவல்!

மேலும், தன்னை நிராகரித்ததால், மீண்டும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று ஆத்திரமடைந்த யோக்ராஜ், தனது மகன் யுவராஜ் சிங்கை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்ததாக கூறினார். யோக்ராஜின் இந்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



Source link