Last Updated:

இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

News18

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் கேசேரியா. இந்த நகரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் சனிக்கிழமை இரவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு மற்றும் அவரின் குடும்பத்தினர் யாரும் அந்த வீட்டில் இல்லை.

மேலும் வீசப்பட்ட வெடிகுண்டுகள் நெதன்யாகுவின் வீட்டின் அருகே புல்வெளியில் விழுந்து தீப்பிடித்தன.

இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபரில் இதே பாணியில் ஹிஸ்புல்லா அமைப்பினர், நெதன்யாகுவின் வீட்டின் அருகே டிரோன் தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீசப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் செய்திகள்/உலகம்/

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீச்சு.. வெளியே சென்றதால் உயிர் தப்பினார்!





Source link