Last Updated:
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படத்தின் ரீமேக்கில் சீயான் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல், இந்த திரைப்படத்திற்கு சில விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வீர தீர சூரன் 2 வெளியாக உள்ளது. அருண் குமார் இயக்கி உள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், ரீமேக் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரீமேக் படத்தில் விக்ரம்?
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் மார்கோ. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கண்டது என்றே சொல்லலாம். இந்த படத்தில், உன்னி முகுந்தன், சித்திக், கபீர் துஹான் சிங், யுக்தி தரேஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை ஹனீப் அதேனி இயக்கி உள்ளார். கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் ஒலிப்பதிவு செய்துள்ளார்.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து சீயான் விக்ரம் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இந்த ரீமேக் திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
January 19, 2025 9:11 AM IST