Last Updated:

அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், அரவிந்த் சாமியை நடிகர் விஜய் சேதுபதி கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவருக்கும் இடையிலான ஜாலியான நட்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

News18

அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், அரவிந்த் சாமியை நடிகர் விஜய் சேதுபதி கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவருக்கும் இடையிலான ஜாலியான நட்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றின் சார்பாக ‘ரவுண்ட் டேபிள்’ நேர்காணல் நடைபெற்றது. இதில் பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி, “எனக்குள் எப்போதும் பாதுகாப்பு உணர்வு இருந்ததில்லை. இப்போதும் கூட அது இல்லை. காரணம் என்னுடைய படம் வெற்றிபெறும்போது, மக்கள் அதை வரவேற்கிறார்கள், விரும்புகிறார்கள் என கடந்து சென்றுவிடுவேன்.

நான் படங்களில் கமிட் ஆகும்போது கூட 7,8 படங்கள் என மொத்தமாகத்தான் கமிட் ஆவேன். காரணம் எது நல்ல படமாக இருக்கும் என தெரியாது. நான் பொதுவாக வெற்றியை சார்ந்து இருப்பதில்லை. எனக்கு எப்போதும் ஒரு பயம் இருந்துகொண்டேயிருக்கும். அது அகம் சார்ந்த பயம் தானே தவிர, வெளியே இருந்து வரும் பயமில்லை.

குறிப்பாக அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ் போன்ற நடிகர்களின் நடிப்பு திறனை பார்க்கும்போது, எனக்குள் பாதுகாப்பற்ற உணர்வு தொற்றிக்கொள்ளும். அவர்கள் எப்படி இதையெல்லாம் இவ்வளவு எளிதாக செய்கிறார்கள் என யோசித்துக்கொண்டிருப்பேன்” என விஜய் சேதுபதி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அரவிந்த் சாமியும், பிரகாஷ் ராஜும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இதை கவனித்த விஜய் சேதுபதி, “சார் அரவிந்த் சாமி இந்த நேர்காணலை கெடுக்க பார்க்கிறார். உண்மையில் அவர் அதைத்தான் செய்வார். அவரை வெளியே நிற்க வையுங்கள்” என ஜாலியாக கூறினார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.





Source link