Last Updated:
Ajith | அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடல் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடல் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
முழுக்க முழுக்க உத்வேகத்தை கூட்டும் பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அனிருத், யோகி சேகர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் மற்றும் ராப் வரிகளை அமோக் பாலாஜி எழுதியுள்ளனர்.
“உலகம் உன்னை எதிர்க்கும்போது, உன்னை நீயே நம்பு போதும்”, “ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும் கதை இன்னும் முடியல தொடருது”, “சாவுக்கு பயமில்லை வெடிக்கட்டும் போரு” போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. அதிரடியான பாடலாகவும், எனர்ஜியாகவும், சோர்ந்திருப்பவர்களை மீண்டெழ வைக்கும் பாடலாகவும் இப்பாடல் உருவாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் ‘ஹாலிவுட்’ தரத்துக்கு இருப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
January 19, 2025 11:06 AM IST