Last Updated:

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News18

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ராயன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: Vidaamuyarchi | ‘உன்னை நீயே நம்பு போதும்!’ – அதிரடியான வரிகளில் ‘விடாமுயற்சி’ 2வது பாடல் எப்படி?

இந்நிலையில் தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை பார்த்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். வாவ்..சூப்பர். ஃபீல் குட் படம். க்யூட்டாக இருக்கிறது. கண்டிப்பாக பிளாக்பஸ்டராகும்” என தெரிவித்துள்ளார்.



Source link