Last Updated:

இதுவரை 30 மாணவர்கள் இந்தப் பயிற்சியை முடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பயிற்சி விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்புபிடி பல்கலைக்கழகம்

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது ஒரு பல்கலைக்கழகம். எங்கு தெரியுமா?

அண்ணாமலை படத்தில் பாம்பை பார்த்து பயந்து நடுங்கும் ரஜினி, படையப்பா படத்தில் லாவகமாக பிடிப்பார். எந்த வகை பாம்பாக இருந்தாலும் அருகே வந்தால் ஒரு நொடி அனைவரும் திகைத்து பயந்துவிடுவோம். ஆனால், பாம்புக்கு பயப்படாதீங்க, அதை பிடிப்பது எப்படி என கற்று தருகிறோம் என ஒரு படிப்பையே தொடங்கியுள்ளது ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஒன்று.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம் king brown உள்ளிட்ட அதிக விஷம் கொண்ட பாம்புகளையும் லாவமாக பிடிக்க கற்றுத் தருகிறது. பாம்புக்கு மனிதர்கள் பயப்படுகிறார்கள், ஆனால், அது மனிதர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை என்கிறார் பாம்பு பிடி பயிற்சியாளர் ஜானி. இதுவரை 30 மாணவர்கள் இந்தப் பயிற்சியை முடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பயிற்சி விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒருமையில் பேசிய சீமான் – வாக்குவாதம் செய்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய நாதக நிர்வாகிகள்!

இந்த பயிற்சி ஏற்கனவே உள்ள பாம்பு பிடி வீரர்களுக்கு போட்டி அல்ல என்றும் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த புதுமையான பயிற்சி குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பாம்பு பிடிப்பது என்பது பாரம்பரிய அனுபவமாக இருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் ஒரு துறை மூலம் பயிற்சி தேவையா என சிலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.



Source link