அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறு வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொதுமக்களுக்கான எச்சரிக்கை appeared first on Daily Ceylon.