Last Updated:
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் வலது பக்க இன்ஜினிற்குள் பறவை ஒன்று மோதியதால் தீப்பொறிகள் பறந்தன.
இத்தாலியின் ரோமில் இருந்து சீனாவின் ஷென்ஷென் நகருக்கு புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் பறவை புகுந்ததால் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் அச்சதில் உறைந்தனர்.
ரோம் நகரின் பியூமிசினோ விமான நிலையத்தில் இருந்து 249 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் ஹைனான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக 787-9 டிரீம்லைனர் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் வலது பக்க இன்ஜினிற்குள் பறவை ஒன்று மோதியது. இதனால் இன்ஜினில் இருந்து தீப்பொறிகள் வெளியேறின.
உடனே துரிதமாக செயல்பட்ட விமானக்குழுவினர், கடலுக்கு மேல் பறந்து விமான எரிபொருளை பெரும்பகுதியை தீர்த்தனர்.
🚨Flight Update:@HainanAirlines #B787 #HU438 from #Rome to #Shenzhen returned safely to #Fiumicino after a bird strike on the right engine (#2) during takeoff. B-1119 experienced multiple engine surges shortly after departure RNY16R.
After holding,landed safely. #AviationSafety pic.twitter.com/ELwuS7ZlZ6
— Antony Ochieng,KE✈️ (@Turbinetraveler) November 10, 2024
அண்மையில் திருச்சியில் நடந்த அதே பாணியில், விமானத்தின் எடை குறைந்ததும், வட்டமிட்டபடி பயணித்து, மீண்டும் ரோம் நகரத்திலேயே பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
November 11, 2024 7:06 PM IST
விமான இன்ஜினில் சிக்கிய பறவை…பயங்கர சத்தத்துடன் தீப்பொறிகள் கிளம்பியதால் பரபரப்பு!