Last Updated:
Vetrimaaran | “ஒரு தெருவில் ஒருவர் குடிக்காம இருந்தாலே பெரிய விஷயம். ஏனென்றால் ஒரு தெருவில் பத்து குடி நோயாளியாக இருக்கிறார்கள். நானும் நிக்கோட்டின் அடிக்சனில் இருந்தேன்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
“ஒரு தெருவில் ஒருவர் குடிக்காம இருந்தாலே பெரிய விஷயம். ஏனென்றால் ஒரு தெருவில் பத்து குடி நோயாளியாக இருக்கிறார்கள். நானும் நிக்கோட்டின் அடிக்சனில் இருந்தேன்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாட்டில் ராதா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாருமே ஏதோ ஒரு அடிக்சன்குள்ளதான் இருக்கிறோம்.
எனக்கு ஆல்கஹால் அடிக்சன் இல்லை. நிக்கோட்டின் அடிக்சன் இருந்தது. எல்லோருமே டிஜிட்டல் அடிக்ஷனில் தற்போது இருக்கிறோம். அடிக்சன் எல்லா காலகட்டத்திலும் நம் சமூகத்தில் உண்டு அது இல்லாத காலகட்டமே இல்லை.
இதையும் வாசிக்க: Vishal | வைப் மோடுக்கு மாறிய விஷால்… ரசிகர்களை கவரும் வீடியோ வைரல்!
இப்போ உள்ள காலகட்டத்தில் இருக்கும் அடிக்சன் குடி நோய். 25, 30 வருடங்களுக்கு முன்பு ஒரு தெருவில் ஐந்து பேர் இருந்தால் அதில் ஒருவர் குடிநோயாளியாக இருப்பார். இப்போது ஒரு தெருவில் ஒருவர் குடிக்காம இருந்தாலே பெரிய விஷயம். ஏனென்றால் ஒரு தெருவில் பத்து குடி நோயாளியாக இருக்கிறார்கள். குடிக்கிறவங்களுக்கும் குடி நோயாளிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தான் இந்த ‘பாட்டல் ராதா’ படம் பேசுகிறது” என தெரிவித்துள்ளார்.
January 19, 2025 10:25 AM IST