ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, அணி தேர்விற்காக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இடையே நீண்ட நேர சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, துணை கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை கவுதம் கம்பீர் பரிந்துரைத்ததாகவும், ஆனால் ரோகித், அகர்கரின் தேர்வாக சுப்மன் கில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Also Read | 8 மேட்ச்சில் 752 ரன்கள் குவித்த கருண் நாயர்… இந்திய அணியில் இடம்பெறாதது ஏன்?
இதேபோல், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை சேர்க்க கம்பீர் விரும்பியதாகவும், ஆனால் ரிஷப் பந்தை மற்ற இருவரும் தேர்வு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த இரண்டு விஷயத்திலும் முரண்பாடு நிலவியதாக கூறப்படும் நிலையில், கடைசியில் கேப்டன் ரோகித் மற்றும் அகர்கரின் தேர்வாக கூறப்படும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 19, 2025 8:41 PM IST