Last Updated:
இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் மூலம் உள்ளூர் மக்களே ஆட்சி செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று அந்நாட்டின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக்க வாக்குறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அநுர குமார திசநாயக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.
மேலும், இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் மூலம் உள்ளூர் மக்களே ஆட்சி செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இருப்பினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் நீண்ட கால கோரிக்கைகளான சுயநிர்ணய உரிமை, 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் குறித்து அநுர குமார திசநாயக்க நேரடியாக எதுவும் பேசவில்லை.
இதற்கிடையே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அதிபர் அனுர குமார திசநாயக்க, இலங்கை கடல் எல்லைக்குள் தமிழ்நாடு மீனவர்கள் நுழைவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 11, 2024 10:59 AM IST
“இலங்கை கடல் எல்லைக்குள் தமிழ்நாடு மீனவர்களை தடுக்க நடவடிக்கை” – அதிபர் அநுர குமார திட்டவட்டம்!