Last Updated:
தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் பான் இந்தியா ரிலீசாக இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தில் தற்போது 20 நிமிட கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புஷ்பா ரீ லோடட் (Pushpa 2 Reloaded) என விளம்பரம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் கூடுதல் காட்சி கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா முன்னணி கேரக்டரில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் திரைக்கதை, பின்னணி இசை, பாடல்கள் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.
தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் பான் இந்தியா ரிலீசாக இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
குறிப்பாக தமிழ் மொழியில் டப்பிங் சிறப்பாக உள்ளதன ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். வசூலை அள்ளி குவித்த புஷ்பா 2 திரைப்படம் 1850 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தில் நீக்கப்பட்ட 20 நிமிட காட்சிகளை மீண்டும் சேர்த்து கடந்த 17ஆம் தேதி முதல் திரையிட்டு வருகின்றனர். அது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இதனால் புஷ்பா 2 படத்தை மீண்டும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரம் கூடுதல் காட்சிகள் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் மட்டுமே இருப்பதால் மற்ற மொழி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
January 19, 2025 9:36 PM IST