Last Updated:

தனது குடும்பத்தை அழித்தவர்களை கதாநாயகன் பழிவாங்குகிறார் என்ற மிகவும் பழைய கதை தான் மார்க்கோ படத்துடைய கதை. இருப்பினும் விறுவிறுப்பான சண்டை காட்சிகள், திரைக்கதை, படம் முழுக்க நிறைந்திருக்கும் ரத்த காட்சிகள் என ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் அமைந்தது

News18

மலையாள மொழியில் உருவான மார்கோ என்ற திரைப்படம் இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகர் விக்ரம் நடிப்பார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதன் உண்மை தன்மை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

தமிழில் வெளியான கருடன் என்ற படத்தில் சசிகுமார் உடன் இணைந்து உன்னி முகுந்தன் நடித்திருந்தார். இந்த படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். கருடன் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் உன்னி முகுந்தன் மலையாளத்தில் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவை எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான மார்கோ என்ற திரைப்படம் மலையாள மொழியையும் தாண்டி பான் இந்தியா அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ஹனீஃப் அடாணி இயக்கியுள்ளார். தனது குடும்பத்தை அழித்தவர்களை கதாநாயகன் பழிவாங்குகிறார் என்ற மிகவும் பழைய கதை தான் மார்க்கோ படத்துடைய கதை. இருப்பினும் விறுவிறுப்பான சண்டை காட்சிகள், திரைக்கதை, படம் முழுக்க நிறைந்திருக்கும் ரத்த காட்சிகள் என ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் அமைந்தது.

ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்துள்ளது. ஒரு மலையாள படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைப்பது வியக்கத்தக்கது என சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் உன்னி முகுந்தனை நேரில் சந்தித்து நடிகர் விக்ரம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையும் படிங்க – கவுதம் மேனன் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தானா? தீயாய் பரவும் தகவல்…

இதனைத் தொடர்ந்து மார்கோ இரண்டாம் பாகத்தில் அவர் வில்லனாக நடிப்பார் என்றும், அந்த படத்துடைய தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக இடம் பெறுவார் என்றும் தகவல் பரவின. இந்த இரண்டு தகவல்களிலும் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. மார்கோ 2 திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பினும் அதில் விக்ரம் இடம் பெறுவாரா என்பதை படக் குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link