Last Updated:
Bigg Boss 8 tamil | விஜே விஷாலுக்கு ஒருநாளைக்கு ரூ.15,000 சம்பளம் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பார்வையாளர்களுக்குப் பரிட்சையமானவர்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்துக்கு முன்னேறிய 5 நபர்களின் சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு தான் சம்பளம் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேற இறுதிக்கட்டத்துக்கு முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, ராயன், விஷால் முன்னேறினர். இதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும், சௌந்தர்யா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முத்துக்குமரன் உள்ளிட்ட 5 பேரின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முத்துக்குமரனுக்கு ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களின் அடிப்படையில் அவருக்கு ரூ.10 லட்சத்துக்கு 50 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டைட்டில் வின்னர் என்பதால் ரூ.40 லட்சத்துக்கு 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும். அத்துடன் அவர் டாஸ் வென்ற தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சௌந்தர்யாவின் சம்பளத்தைப் பொறுத்தவரை அவருக்கு ஒருநாளைக்கு ரூ.12,000 சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி அவர் 105 நாட்கள் இருந்ததால், ரூ.12 லட்சத்துக்கு 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர் ராயன். இவருக்கு ஒருநாளைக்கு ரூ.12,000 சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் அவர் பிக் பாஸ் வீட்டில் 77 நாட்கள் இருந்துள்ளார். அதன் அடிப்படையில் அவருக்கு ரூ.9 லட்சத்துக்கு 24 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் அவர் வென்ற ரூ.2 லட்சமும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
விஜே விஷாலுக்கு ஒருநாளைக்கு ரூ.15,000 சம்பளம் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பார்வையாளர்களுக்குப் பரிட்சையமானவர். இவர் மொத்தம் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு ரூ.15 லட்சத்துக்கு 75 ஆயிரம் சம்பளம் பெற்றிருக்கிறார். அத்துடன் பணப்பெட்டி டாஸ்கில் அவர் வென்ற ரூ.5 லட்சமும் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பதிலேயே டாப் என்றால் அது பவித்ரா ஜனனி தான். ஒரு நாளைக்கு அவருக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. 105 நாட்கள் இருந்ததால் மொத்தமாக ரூ.21 லட்சத்தை சம்பளமாகவும், பணப்பெட்டி டாஸ்கில் 2 லட்சம் என மொத்தம் 23 லட்சத்தை அள்ளிச் சென்றிருக்கிறார் பவித்ரா ஜனனி.
January 20, 2025 9:04 AM IST