Last Updated:

சாட் ஜிபிடி என்ற புதிய வசதி அறிமுகம் செய்ததன் மூலம் அந்த நிறுவனத்தின் பங்கு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது.

என்விடியா

உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா.

ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ‘இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்’ – வெற்றி உரையில் டொனால்ட் டிரம்ப் பெருமிதம்!

செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 139 புள்ளி 93 டாலர்களாக இருந்தது.



Source link