அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று [ஜனவரி 19] முதல் தடை அமுலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்துள்ள உறுதியைத் தொடர்ந்து மிண்டும் சேவையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.