கமலுக்கு பதிலாக விஜய்சேதுபதி என்ற தொகுப்பாளர் மாற்றமே இந்த சீசனை பார்க்க ஆர்வத்தை கூட்டியிருந்தது. இதில் விஜய்சேதுபதியின் வித்தியாசமான உடைகள், மேக்கப், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ‘ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு’ என்ற டேக் லைனுடன் இந்த சீசன் தொடங்கியது.

ட்ராஃபியை உடைத்து வெளியேறிய சாச்சனா: விசு படத்தில் வருவது போல ஒரு கோடு போட்டு பிக்பாஸ் வீட்டை இரண்டாக பிரித்தனர். அதில் ஒருபுறம் ஆண்கள். மறுபுறம் பெண்கள். ஆண்கள் vs பெண்கள் என தொடங்கிய போட்டியில் தொடக்கத்தில் பெண்கள் அணிகளுக்கு ஏகப்பட்ட மோதல்கள்.

இதையும் வாசிக்க: Bigg Boss 8 tamil | முத்துக்குமரனுக்கு தான் சம்பளம் குறைவு…அப்போ யாருக்கு அதிகம் தெரியுமா?

சண்டை சச்சரவுகள். ஆண்கள் அணியினர் ஓரளவு ஒற்றுமையாக தங்களை காட்டிக்கொண்டனர். அடுத்து 24 மணி நேர எவிக்ஷனில் சாச்சனா நாமினேட் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த 24 மணி நேரத்தில் டிராஃபியை உடைத்து வெளியேறினார். இந்த சம்பவம் தொடக்கத்தில் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் 5வது நாள் அவர் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்து சர்ப்ரைஸ் செய்தார்.

அடுத்து நடந்த விவாத டாஸ்க், பட்டிமன்றம், பேச்சுப்போட்டிகளில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர். இதில் முத்துக்குமரன் பேச்சு பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் அவர் வலுவான போட்டியாளராக இருப்பார் என்பதையும் உறுதிபடுத்தியது. இந்த நாட்களில் ரவீந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து முதல் வார இறுதியிலேயே அவர் வெளியேற்றப்பட்டார்.

இதையும் வாசிக்க: Bigg Boss 8 | பரிசுத்தொகையை எதற்கு செலவு செய்வீர்கள்? – முத்துக்குமரன் சொன்ன பதில் 

வைல்டு கார்டு என்ட்ரி: இரண்டாவது வார எவிக்ஷனில் அர்னவ் வெளியேறினார். தொடர்ந்து டல் அடித்துக்கொண்டிருந்த ஆட்டத்தின் மூன்றாவது வாரத்தில் கொண்டுவரப்பட்ட ‘கில்லர் காயின்’ டாஸ்க் விறுவிறுப்பை கூட்டியது. அந்த வார இறுதியில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார். வைல்டு கார்ட் என்ட்ரியாக மஞ்சரி, ரயான், ரானவ், வர்ஷினி, ரியா, சிவக்குமார் என 6 பேர் வீட்டுக்குள் வந்தனர். இவர்களின் வருகைக்குப் பின்னர் ஆட்டம் சூடுபிடித்தது. 4வது வாரத்தில் யாரும் வெளியேற்றப்படவில்லை.

5வது வாரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பர்சனல் பக்கங்களை பகிர்ந்தனர். மிகவும் எமோஷனலான இந்த வாரத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும், சக போட்டியாளர்களின் கதைகளை அறிந்துகொண்டனர். இந்த வாரத்தின் இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் சுனிதா வெளியேற்றப்பட்டார்.

ஸ்கூல் டாஸ்க்: ஆறாவது வாரத்தில் ‘ஸ்கூல் டாஸ்க்’ நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் பள்ளிக்கூட சீருடையை அணிந்துகொண்டு மாணவர்கள் போல அட்டகாசங்களை செய்தனர். இந்த டாஸ்க்கில் காதலும், நட்பும், மோதலும் ஏற்பட்டது. இறுதியில் ரியா வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே மொத்த வீடும் தனக்கு எதிராக இருந்தபோதிலும் பேச்சாற்றல் மற்றும் செயல்பாடுகளால் தனித்து விளங்கிய மஞ்சரி கேப்டனாகி அசத்தினார். பிக்பாஸ் தர்பார் டாஸ்க்கைத் தொடர்ந்து நடைபெற்ற ஏழாவது வார இறுதியில் வர்ஷினி வெளியேற்றப்பட்டார்.

8ஆவது வாரத்தில் கேப்டனாக இருந்தார் தீபக். இந்த வாரத்தில் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. சண்டைகளுக்கு வழிவகுந்த இந்த டாஸ்க்கில் ரயான் – ரானா மோதல் வெடித்தது. இந்த வார இறுதியில் சிவகுமார் வெளியேற்றப்பட்டார். 9வது வாரத்தில் ஏஞ்சல் டெவில் டாஸ்க் நடைபெற்றது.

இதையும் வாசிக்க: Bigg Boss 8 tamil | பிக்பாஸிலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறாரா?…அவர் பேச்சு சொல்வதென்ன?

இந்த வார இறுதியில் சாச்சனாவும் ஆனந்தியும் வெளியேற்றப்பட்டனர். 10வது வாரத்தில் முதல் முறையாக ரஞ்சித் கேப்டனானார். பத்தாவது வாரத்தில் சத்யாவும், தர்ஷிகாவும் வெளியேற்றபட்டார்கள்.

11வது வாரத்தில் ரானவுக்கு கையில் அடிபட்டது. அதைத்தொடர்ந்து பலரும் அவர் நடிப்பதாக குற்றம்சாட்டி பின்னர் மன்னிப்புக் கோரிய சம்பவங்களும் நடைபெற்றது. இந்த வாரத்தில் தான் ஜாக்குலினுக்கும், அன்ஷிதாவுக்கும் கடுமையான சண்டை நடைபெற்றது. இதன் இறுதியில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.

12-வது வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர். பல எமோஷனலான தருணங்கள் அரங்கேறின. இந்த வாரத்தின் இறுதியில் தான் ஜெஃப்ரியும், அன்ஷிதாவும் வெளியேறினர். 13-வது வாரத்தில் ரயான் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து ‘டிக்கெட் டு பினாலே’ வைத் தட்டிச்சென்றார். இந்த வாரத்தில் ரானவும் மஞ்சரியும் வெளியேறினர். 14-வது வாரத்தில் தீபக் மற்றும் அருண் விளையாட்டிலிருந்து வெளியேறி இருந்தனர்.

15வது வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் வந்தது. பணப்பெட்டியை எடுப்பவர்கள் போட்டியில் தொடரலாம் என்ற நிலையில், ஜாக்குலின் இந்த டாஸ்க்கில் தோற்று வெளியேறினார். இறுதிப்போட்டிக்குள் முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, ரயான், விஷால் முன்னேறினர். இறுதியில் பவித்ரா, ரயான் வெளியேற, முத்துக்குமரன் சௌந்தர்யா விஷால் முதல் 3 இடங்களை பிடித்தனர். விஷால் வெளியேற, முத்துக்குமரன் வின்னராகவும், சௌந்தர்யா ரன்னராகவும் போட்டியை முடித்தனர்.



Source link