Last Updated:

Gautham Vasudev Menon | தனுஷ் நடிப்பில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை நான் இயக்கவில்லை என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18

தனுஷ் நடிப்பில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை நான் இயக்கவில்லை என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள மலையாள படத்துக்கு ‘Dominic and the Ladies Purse’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார் கௌதம் மேனன்.

இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். வரும் ஜனவரி 23-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் கௌதம் மேனன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்க: Vijay | விஜயை பரந்தூர் களத்துக்கு வரவைத்த சிறுவன்..யார் இந்த ராகுல்?  

அதில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் தொடர்பான கேள்வியின்போது, அதற்கு பதிலளிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார் கௌதம் மேனன். மேலும் அது குறித்து அவர் பேசும்போது, “அந்தப் படத்தின் பெயர் என்ன சொன்னீர்கள்? எனக்கு அதில் ஒரு பாடல் மட்டுமே நினைவு இருக்கிறது.

அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. வேறு யாராவது இயக்கியிருப்பார்கள்” என்று பதிலளித்தார். அவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் தனுஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் இடையிலான மோதல் நீடித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





Source link