இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 லேப்டாப் ஆனது, இப்போது அமேசான் விற்பனையிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த லேப்டாப், முதலில் ரூ.86,239 விலையில் கிடைத்தது, ஆனால், தற்போது அமேசானில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, தள்ளுபடி சலுகையுடன் கூடிய சிறந்த மற்றும் மலிவான லேப்டாப்பை வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

சாம்சங் கேலக்ஸி புக் 4: தள்ளுபடி விவரங்கள்

அமேசானின் ரிபப்ளிக் டே சேல் விற்பனையின்போது, ​​சாம்சங் கேலக்ஸி புக் 4 லேப்டாப்பின் 8 GB ரேம் + 512 GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டானது ரூ.54,990 விலையில் கிடைக்கிறது. அதாவது, இந்த லேப்டாப் ஆனது 36% தள்ளுபடியில் கிடைக்கிறது. எனவே, இந்த லேப்டாப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.31,249 மிச்சமாகும்.

இது தவிர உங்களுக்கு வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதாவது நீங்கள் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த லேப்டாப்பை வாங்கினால், கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் லேப்டாப்பின் விலை ரூ.53,490ஆகக் குறைக்கப்படும். மேலும், உங்கள் டிவைஸின் பிராண்ட் மற்றும் விவரக் குறிப்புகளைப் பொறுத்து, ரூ.11,300 வரை தள்ளுபடி பெறக்கூடிய எக்ஸ்சேஞ்ச் டீல்களையும் அமேசான் வழங்குகிறது.

இதையும் படிக்க: Mobile Phone: உங்கள் போனில் இனி Storage Full ஆகாது.. இந்த 5 விஷயங்களை மட்டும் பண்ணுங்க..!

சாம்சங் கேலக்ஸி புக் 4: விவரக் குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி புக் 4 லேப்டாப் ஆனது 60Hz ரெப்பிரேஷ் ரேட் உடன் 15.6 இன்ச் முழு FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட இன்டெல் கோர் i5 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, இதில் விண்டோஸ் 11 ஹோம் மூலம் இயங்குகிறது. சாம்சங் கேலக்ஸி புக் 4 லேப்டாப்பில் 45 W சார்ஜிங் ஆதரவுடன் 54 WH பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பை பொறுத்தவரை, Wi-Fi 6, USB டைப்-C போர்ட் மற்றும் புளூடூத் 5.2 ஆகியவை உள்ளன. இந்த லேப்டாப் ஆனது இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கிறது.

இதையும் படிக்க: 38 மணி நேர பேட்டரி லைஃப் வழங்கும் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ANC இந்தியாவில் அறிமுகம்..!

குறைந்த விலையில் சிறந்த லேப்டாப்பை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு சிறந்த தேர்வாகும். வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டீல்களுடன் கிடைப்பதால், இந்த லேப்டாப்-ஐ இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன.



Source link