Last Updated:
வெறுமனே சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் எப்போதும் இருக்கக் கூடாது என்றும் ஒவ்வொரு போட்டியிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சரமாரியாக கோலி மற்றும் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தன.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறலாம் என தகவல்கள் பரவியுள்ளன.
இந்திய அணிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவரும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 2013 இல் நடந்த உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையை வென்று இந்திய அணி அதிரடியாக கம் பேக் கொடுத்தது.
இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பை வென்றதற்கு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் முக்கிய காரணமாக இருந்தனர். அத்துடன் அவர்கள் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து இழந்து விட்டது. இந்த தொடரில் இரு மூத்த வீரர்களின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
வெறுமனே சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் எப்போதும் இருக்கக் கூடாது என்றும் ஒவ்வொரு போட்டியிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சரமாரியாக கோலி மற்றும் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த தொடருக்கு பின்னர் இருவரும் ஓய்வை அறிவிக்கலாம் என்று தகவல்கள் பரவி உள்ளன. இது பற்றி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க – சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? தேர்வுகுழு தலைவர் அகர்கர் விளக்கம்..
அப்போது அவர் முதலில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாகவும், அந்த தொடருக்கு பின்னர் தான் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றால் அத்துடன் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் ஓய்வை அறிவிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
January 20, 2025 5:57 PM IST