Last Updated:

ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடும் மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

News18

சர்வதேச போட்டிகளில் ரன் குவிக்க திணறிவரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரஞ்சிக்கோப்பை தொடரில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் விளையாட உள்ளார். இது குறித்த தகவல்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கும்.

ஆனால் ஆஸ்திரேலியா தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் ஆகியவை மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கடந்த ஆண்டு மட்டும் ரோஹித் சர்மா 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமே 619 ரன்கள் எடுத்திருக்கிறார்.

தொடர்ந்து அவர் ரன் குவிக்க திணறி வருவதால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் ரஞ்சிக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாட உள்ளார்.

ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடும் மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க – 8 மேட்ச்சில் 752 ரன்கள் குவித்த கருண் நாயர்… இந்திய அணியில் இடம்பெறாதது ஏன்?

ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடும் மும்பை அணி வீரர்கள்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆயுஷ் மத்ரே, ஷ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சிவம் துபே, ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கோட்டியன், ஷம்ஸ் முலானி, ஹிமான்ஷுர் சிங், ஷர்துல் சிங். , மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோசா, ராய்ஸ்டன் டயஸ், கர்ஷ் கோத்தாரி.



Source link