Last Updated:
Saif Ali Khan |பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவரது நடிப்பில் அண்மையில் தெலுங்கில் ‘தேவரா’ படம் வெளியானது. பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.
இதையும் வாசிக்க: Vidaamuyarchi | மீண்டும் தள்ளிப்போகிறதா அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி?
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் விழித்ததையடுத்து, சைஃப் அலிகானை கொள்ளையன் 2,3 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும், இதில் சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, சைஃப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பந்த்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
January 16, 2025 8:54 AM IST