Last Updated:

Donald Trump | அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

News18

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடோலின் உள்ளரங்கில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடும் குளிர் காரணமாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளரங்கில் அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. முதலில், துணை அதிபராக ஜேடி வேன்ஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி Brett Kavanaugh பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

Also Read: அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. முகேஷ் அம்பானி அவரது மனைவியுடன் நேரில் வாழ்த்து!

டிரம்ப் பதவியேற்பு

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பீரங்கி குண்டுகள் முழங்கச் செய்யப்பட்டன. பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.



Source link